ஓய்வூதிய நிலையிலுள்ள ஆசிரியர்களுக்கு சலுகை?

ஓய்வுபெறும் வயதெல்லையை அண்மித்துள்ள ஆசிரியர்களுக்கு தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தின் போது சலுகை வழங்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

58 மற்றும் 59 வயதுடைய ஆசிரியர்கள் தற்போது சேவையாற்றும் அதே பாடசாலைகளில் தமது விருப்பத்திற்கமைவாக ஓய்வுபெறும் வரை சேவையாற்றுவதற்கு அவகாசம் வழங்குமாறு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 – 11 ஆம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு இம்மாத இறுதியில் வழங்கப்படவுள்ள இடமாற்றத்தின் போது இதனை கடைப்பிடிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் மூன்று கட்டங்களாக இடம்பெறுவதுடன், இதன் முதல் கட்டம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த இடமாற்றம் வழங்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டம் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு