நீர்ப் பாவனை அதிகரிப்பு

அதிக வெப்பநிலையின் காரணமாக நாட்டின் நீர்ப்பாவனை 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.

இதேவேளை, காலநிலை மாற்றத்தினால் மின் பாவனை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதவண்ணம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த வியாழக்கிழமையில் சுமார் 2,500 மெகாவோட் மின்சாரத்திற்கான கேள்வி ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற ஒரு விடயமாகும் என்றும் மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு