பனை தறிப்பவர்களுக்கான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது

பனைவள அழிப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டவிரோத பனை தறித்தலுக்கான தண்டனைச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை அறிவித்துள்ளது.

பனை அபிவிருத்திச் சபையின் முகாமையாளர் எஸ்.ஸ்ரீவிஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பனை வளத்தினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்துள்ளது. பனை வளத்தினை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிவரும் நிலையில், பனை வள அழிப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், பனைவளத்தினைப் பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்காகவும் இலங்கையில் 1993ஆம் ஆண்டு மரங்களைத் தறித்தல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், பனை தறித்தலானது தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பனை மரங்கள் சட்டவிரோதமாக தறிப்பதை கட்டுப்படுத்தும் பொறுப்பை பனை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு