கோப்பாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மீன் விற்பனை நிலையம் நேற்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த மீன் விற்பனை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் விற்பனை நிலையம் அந்த பகுதி மக்களின் நீண்டகால தேவையாக இருந்து வந்துள்ள நிலையில், குறித்த மீன் விற்பனை நிலையத்தின் சந்தை நடவடிக்கைகள் ஆரம்பமாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.