தலவாக்கலையில் நடமாடும் சேவை

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில், நடமாடும் சேவை, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

தலவாக்கலை, லிந்துலை, கூமூட், பெயாவெல், நாகசேனை, ரட்ணகிறி, சமர்செட், ஒலிரூட், டெவோன் மற்றும் கொட்டகலை டிரைட்டன் ஆகிய பத்து கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் நன்மையடையும் வகையில் இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டதாக நுவரெலியா மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த நடமாடும் சேவையில் பிறப்பு சான்றிதழை சட்டரீதியாக மொழி பெயர்த்து கொடுத்தல், பிறப்பு சான்றிதழில் உள்ள பிழைகளை அடையாளம் கண்டு அவற்றை திருத்துதல், பிறப்பு சான்றிதழின் புதிய பிரதிகளை வழங்குதல், விவாகமாகாத தம்பதியினரை சட்டபூர்வமாக விவாகம் செய்து வைத்தல், ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு, நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு என பல சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு