கையடக்கத் தொலைபேசி ஊடாக சமூகவிரோத செயற்பாடுகள்?

பெற்றோரின் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தி சில பிள்ளைகள், வகுப்புவாத மற்றும் சமய விடயங்கள் தொடர்பான செய்திகளை பரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் இரகசிய பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பல பாடசாலை மாணவர்கள் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாணவர்கள் தம்மிடையே சமூக வலைத்தளங்களை ஸ்தாபித்து அதன் ஊடாக செயற்படுவதாகவும், தற்போதைய சட்டங்களுக்கு அமைய இப்படியான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 07 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டை பாதிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மாணவர்களாக இருப்பினும் அவர்களுக்கு கருணை காட்ட முடியாது எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு