சீன பொருட்களுக்கான சுங்க தீர்வையினை அமெரிக்கா அதிகரித்துள்ளமைக்கு சீனா தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
சீன வர்த்தக நலன்களை பேணும் வகையில் அதற்கு ஏற்ற மாற்று வழியினை சீனா மேற்கொள்ளும் எனவும், இந்த விடயம் தொடர்பாக சீன பிரதி ஜனாதிபதி லை ஹீ, அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்ரீபன் நுச்சின் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளதாகவும் சீனப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா அறிவுசார் பொருட்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக தெரிவித்து, சீன பொருட்களுக்கு 60 பில்லியன் அமெரிக்க டொலர் வரையான வரியினை விதிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் இந்த செயல் காரணமாக அமெரிக்க – சீன வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படுமென வர்த்தக சமூகத்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.