மக்களிடம் மன்னிப்புக் கோரினார் ஜப்பான் பிரதமர்

தமது அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளமை தொடர்பில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சம்மேளனமொன்றில் இன்று கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த சம்மேளனம் இடம்பெறும் வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் கலகம் அடக்கும் படையினர் குவிக்கப்பட்டிருந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திற்கு சொந்தமான இடமொன்றை தனது மனைவிக்கு தொடர்புடைய நிறுவனமொன்றிற்கு பாரிய சலுகை விலையில் விற்பனை செய்ததாக ஜப்பான் பிரதமருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு