களமிறங்குகிறது சீட்டா குரூப்

பாதாள உலகக் கும்பலை கைது செய்வதற்காக, “சீட்டா குரூப்” களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர்மட்ட வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த “சீட்டா குரூப்” இல், அதிரடிப்படையினர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள்களில் இவர்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பவர் என்றும், இந்தக் குழு, மேல் மாகாணத்தில் விஷேடமாக கொழும்பு பகுதியிலும் தென் மாகாணத்திலும் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளை தளபதி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், எம்.ஆர்.லதீபின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கவுள்ள இந்தக் குழு விரைவில் செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு