அரசாங்கம் கடந்தகால தவறுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதன் பிரகாரம், அரசியல் பேதமின்றி இளைஞர் சமூகத்திற்கு நன்மைகளைப் புரியுமென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நிக்கவரட்டியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் எதுவித பேதமும் இன்றி ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தின் அபிவிருத்திக்காக பாடுபடுவதாகவும், நாட்டின் எந்தவொரு அரசியல் நிலைமாற்றத்திலும் இளைஞர் சமுதாயத்தின் தாக்கம் வலுவானது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.