மணல் அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

நிர்மாணத்துறைக்கு தேவையான கல், மணல், மண் ஆகியவற்றிற்கான அனுமதி பத்திரத்தை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் முறைமையை விரைவில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நிர்மாணத்துறையில் காணப்படும் சவால்கள் மற்றும் நடைமுறை நிலமைகள் குறித்து நேற்று (29) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

கல், மணல் மற்றும் மண் என்பவற்றை பெற்றுக்கொள்ளும் போது மோசடி வர்த்தகர்கள் மேற்கொள்ளும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த காலங்களில் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாகவும், எவ்வாறாயினும் நிர்மாணத்துறைக்கு தேவையான கல், மணல் மற்றும் மண் என்பனவற்றை உரிய இடங்களில் பெற்றுக்கொள்ள எந்தத் தடைகளையும் விதிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு