எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது – லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாதென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், மத்திய வங்கியின் திருட்டு தொடர்பாக கண்டறிந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் குழு ஒன்று நியமிக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 15 பரிந்துரைகளில் 13 விடயங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணத்தால் அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை என்றும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்வரும் 2ஆம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ள அதேவேளை, கட்சி எவ்வாறான தீர்மானம் எடுத்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மனச்சாட்சிக்கு அமைவாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் உரிமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இணக்கப்பாட்டு அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமாயின் நாட்டுக்காக பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறில்லாவிட்டால் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இரவு 9.00 மணியாகும் போது இந்த இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்கு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு