22 முதல் ஜீ.பி.எஸ் சலுகை

இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள அமெரிக்க ஜீ.எஸ்.பி வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனூடாக இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் பெரும் நன்மையை அடைவர் எனவும், தற்போது, இலங்கை ஏற்றுமதியாளர்கள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜீ.எஸ்.பி வரிச்சலுகை குறித்த ஆவணத்தில் கைச்சாத்திட்ட நிலையில், இலங்கை உட்பட 120 நாடுகள் இந்த சலுகையினை பெறவுள்ளமைக்கு அமைவாக, சுமார் 5,000 பொருட்களை வரிச்சலுகையுடன் இந்த 120 நாடுகளும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு