75 ஆண்டுகளுக்கு பின்னர் திருமலைக் கடலில் மீட்கப்பட்ட கப்பல்

இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில், குண்டுத் தாக்குதலில் நிர்மூலமான கப்பல் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஜப்பான் விமானம் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் இந்த கப்பல் கடலில் மூழ்கியது. 138 மீட்டர் நீளமுடைய குறித்த கப்பல், பயணிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

சகயின் எனப்படும் இந்த கப்பல் மூழ்கி 75 ஆண்டுகளுக்கு பின்னர் இதனை மீட்பதற்கு கடந்த 05 மாதங்களாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு