உதயங்கவை நாடு கடத்துமாறு கோரிக்கை

டுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் ஊடாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதுதொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியம், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு அறியப்படுத்தியதற்கு அமைய, அவரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, அவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு