அபராதத் தொகையை அதிகரிக்கத் தீர்மானம்

சொத்து விபரங்களை வெளிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, இதுவரை அறவிடப்பட்ட 1000 ரூபா தொகையை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளதுடன், குறித்த அபராத தொகையை திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உயர் வகுப்பு அரச ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவர்களின் சொத்துக்கள் குறித்த ஆண்டறிக்கையை சமர்ப்பிப்பது கட்டாயமானது என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நூற்றுக்கு 75 வீதமானவர்கள் தமது சொத்துக்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளிப்படுத்துவதில்லை என்றும், அதற்கேற்ப அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு