தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலைகள் அதிகரிப்பு

பண்டிகைக்காலமான தற்போது சந்தைகளில் தேங்காயின் விலை 100 ரூபாவாகவும், தேங்காய் எண்ணெய்யின் விலை 330 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதுடன், இதன் காரணமாக புதுவருடத்தை கொண்டாட தயாராகும் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சில வர்த்தகர்கள் எழுந்தமான முறையில் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதாகவும் அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு