ஐரோப்பிய குழு வருகை

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உயர் மட்ட உறுப்பினர்கள் குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.

அந்தக் குழுவினர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதாகவும், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அது தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய இந்த குழு இலங்கை வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வர்த்தகர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்டவர்களை கொழும்பில் வைத்து அந்தக் குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்க ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு