கட்டுநாயக்கவில் பதற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றமான நிலை தோன்றியுள்ளது.

விமான நிலையத்திலுள்ள பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு பதற்றநிலை தோன்றியுள்ளது.

1994ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதுடன், அதன்படி இந்த ஆண்டு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்படும் நிலையில், ஒரு ஊழியருக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு வழங்கிய போது, அவர் அதை கிழித்து குப்பையில் போட்டதற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் எம்.டப்ளியூ.பி.முகந்திரம் தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியன கடந்த ஆண்டில் 11 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாகவும், இந்த சம்பள அதிகரிப்பினால் அதில் 0.98 வீத அளவு மேலதிக செலவினமே ஏற்பட போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு