கட்சிக்குள் பூரண மறுசீரமைப்பு – ரணில் அதிரடி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பூரண மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினருடனான விஷேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் உறுப்பினர்கள் கேள்விகளைத் தொடுக்கலாமென பிரதமர் சந்தர்ப்பம் வழங்கிய போதும், எந்த ஒரு உறுப்பினரும் இதன்போது பிரதமரிடம் கேள்வி எழுப்பவில்லையெனத் தெரிவிக்கப்படும் அதேவேளை, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள புதிய வேட்பாளர் குறித்து கலந்துரையாட தான் இணங்குவதாகவும், அனைவரும் எதிர்பார்க்கும் மறுசீரமைப்பை கட்சியில் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு