பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.