ஸ்ரீ.சு.க பூரண ஆதரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் ஒன்று அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளதாகவும், இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 25இற்கும் அதிகமான உறுப்பினர்கள் வருகை தந்திருந்ததாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, இந்தக் கூட்டத்தின் போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம் எட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்காது இருக்க தீர்மானித்துள்ளதாக இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு