வழமை நிலையில் மின் உற்பத்தி

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, செயற்பாடுகள் வழமை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மின் உற்பத்தி இயந்திரத்தின் குளிரூட்டல் தொகுதியில் கடந்த 2ஆம் திகதி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்திருந்த நிலையில், பொறியியலாளர்களினால் குறித்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, வழமைநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நுரைச்சோலையில் அனல் மின் நிலைய இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோதும், அது பாரியளவானதாக அமையவில்லையென மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார வடுகே தெரிவித்துள்ளதுடன், பாரியளவான கோளாறாக ஏற்பட்டு 2, 3 நாட்களுக்கு திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை இருந்திருந்தால், மின்சார துண்டிப்பை மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு