பேஸ்புக் தொடர்பில் அதிக முறைப்பாடுகள்

கடந்த மூன்று மாத காலத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பாக 720 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகளில் அதிகமானவை பேஸ்புக் தொடர்பில் கிடைத்திருப்பதாக அந்த பிரிவின் ஊடகப் பேச்சாளர் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ள அதேவேளை, அந்த முறைப்பாடுகளில் நூற்றுக்கு 75 வீதமானவை போலிக் கணக்குகளை இயக்கிச் செல்வது தொடர்பானவையென கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தொடர்பாகவும் கடந்த மூன்று மாத காலத்தில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், அந்த முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு