வள வளத்தைப் பாதுகாக்க திட்டம் அவசியம்

வன வளத்தைப் பாதுகாத்து நாட்டின் வன அடர்த்தியை அதிகரிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு நாட்டுக்குத் தேவையான மரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவதைப் பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், நாடு முகங்கொடுத்துள்ள காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் நாட்டின் வன அடர்த்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 28 வீதமாகவுள்ள நாட்டின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் இதற்கு அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனத்தின் மூலம் திறைசேரிக்கு வழங்கப்படும் நிதி குறித்தும் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக தற்போது அதிக முதலீட்டைச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கிய ஜனாதிபதி, இதன்போது வன பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு