சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் 582 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், குறிப்பாக கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார்.

1929 என்ற விஷேட இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பிலேயே விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும், பொலிஸ் நிலையங்களில், சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் விஷேட பிரிவொன்றை ஸ்தாபித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த முறைப்பாடுகளில் சிலவற்றை விசாரணை செய்வதற்கான அதிகாரத்தை தொழில் திணைக்களத்திற்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும், துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக திணைக்களம் உறுதியளித்துள்ளதாகவும் தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மரினி டி லிவேரா மேலும் தெரிவித்துளளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு