12 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில், இலங்கையர்களுக்கு 12 லட்சம் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம் ஒன்றினை ஆசிய அபிவிருத்தி வங்கி பிரேரித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள நோக்கத்திற்கு அமைய கொழும்பு – திருகோணமலை பொருளாதார பாதை திட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான தளம் மற்றும் கொழும்பு துறைமுகம் என்பனவற்றை இணைக்கும் நோக்கில் 280 கிலோ மீற்றர் நீளமான மத்திய கடுகதி திட்டத்தின் ஊடாக கொழும்பு – திருகோணமலை பொருளாதார பாதை சிறந்த பலனை பெறுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாதையின் இரு மருங்கிலுமுள்ள தலா 50 கிலோ மீற்றர் விஸ்தீரணமான பிரதேசம் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இனங்காணப்பட்டுள்ளன.

திட்டமிடப்பட்டுள்ள இந்த உத்தேச பாதை ஆறு மாகாணங்கள் மற்றும் 10 மாவட்டங்களின் ஊடாக செல்வது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு