நக்கிள்ஸ் மலைத்தொடரில் சிலர் மாயம்

ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 07 பேர் நக்கிள்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட 07 பேரும் நக்கிள்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில், இவ்வாறு காணமல் போனவர்களை தேடும் பணிகளை பொலிஸார் தற்போது ஆரம்பித்துள்ளனர்.

காணமல் போனவர்கள் நேற்று காலை 11.00 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு சேவை இலக்கமான 119 என்ற எண்ணுக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு