நாளை விஷேட கலந்துரையாடல்

கூட்டு எதிர்க்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை (10) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தொடர்ந்து கூட்டு எதிர்கட்சியினால் நடத்தப்படும் முதலாவது கலந்துரையாடல் இதுவெனவும், இதில் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமைக்கான காரணம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு