மத்திய குழுக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மீண்டும் கூடவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இரவு 7.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், தமது பதவிகளில் இருந்து விலகுவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கான கட்சியின் விஷேட மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.

அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் இணைந்து அரசாங்கத்தில் தொடர்ந்தும் செயற்பட முடியாதென ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்தபோதே அவர்கள் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளதுடன், அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைக் புறக்கணித்திருந்தனர்.

குறித்த விடயங்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மீண்டும் கூடவுள்ள நிலையில், ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு