அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்து

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் இடி, மின்னல் தாக்கங்களுடன் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலேயே இவ்வாறான காலநிலை நிலவகூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியகூறுகளும் காணப்படுவதாகவும், மின்னல் தாக்கங்களின் போது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மின்னியல் உபகரண பயன்பாட்டினை தவிர்த்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு