தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு இல்லை?

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லையென இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களின் சொந்த பணத்தில் செலவு செய்து அந்த கடமைகளுக்காக சென்றிருந்த போதிலும், இதுவரை அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை கவலைக்குரியதென அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ள நிலையில், அந்த ஆசிரியர்கள் வழங்கிய பற்றுச்சீட்டுக்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதுடன், இந்த நிலைமையை சீரமைத்து குறித்த கொடுப்பனவுகளை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு