சுகாதார சேவை சர்வதேச தரத்திலுள்ளது

இலங்கையின் சுகாதார சேவையானது உலகளாவிய ரீதியில் தரம் வாய்ந்ததாக காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதநொம் ஜெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இலவச சுகாதார சேவை தரமானதாக அமைந்துள்ளமையே அதற்குக் காரணம் எனவும், இலங்கையின் தலைவர்கள் சுகாதார சேவைக்கு தெளிவான வழிகாட்டல்களை வழங்குவதாகவும் கடந்த வாரம் நடைபெற்ற உலக சுகாதார தின வைபவத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது, இலங்கையானது குறை வருமான நாடாக இருந்த போதிலும், தற்போது நடுத்தர வருமான நாடாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான சூழ்நிலையில் நாட்டின் இலவச சுகாதார சேவையானது தரமானதாக அமைந்துள்ளமையானது வளர்முக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு