உத்தியோகபூர்வ விஜயம் இரத்து – ட்ரம்பின் திடீர் அறிவிப்பு

தென் அமெரிக்காவுக்கான தமது முதலாவது அதிகாரபூர்வ விஜயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்துச் செய்துள்ளார்.

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரசாயனத் தாக்குதல் குறித்து கவனம் செலுத்தியே அவர் இந்த விஜயத்தை இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் இடம்பெறவுள்ள அமெரிக்க உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக டொனால்ட் ட்ரம்ப் தென் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதிலும், இறுதியில் அவர் தமது பயணத்தை இரத்துச் செய்துள்ளார். இந்த நிலையில், அவர் சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு