நாளை விஷேட ரயில் போக்குவரத்து

புதுவருட பண்டிகை காலத்தில் பிரயாணிகளுக்கு வசதிக்காக நாளைய தினம் 12 விஷேட புகையிரதங்கள் சேவையில் இணைத்து கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய, இரவு 7.20 மணிக்கு கொழும்பு தொடக்கம் பண்டாரவளை நோக்கி குளிரூட்டப்பட்ட புகையிரதம் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை இரவு 10 மணிக்கு கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலும், மாலை 6.50 மணிக்கு கொழும்பு கோட்டை தொடக்கம் காலி வரையில் இரு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டை தொடக்கம் மஹவ வரை இரு விஷேட புகையிரதங்களும், மரதானை தொடக்கம் காலி மற்றும் மாத்தறை வரை 4 விஷேட புகையிரதங்களும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு