வன்முறையில் பலியானவர்களுக்கு நஷ்டஈடு

கடந்த மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் விளைவால் உயிரிழந்த மூன்று நபர்களுக்கும் நஷ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமைக்கு இணங்க, அந்த வன்முறைச் சம்பவத்தால் உயிரிழந்த ஒருவருக்கு நஷ்டஈடாக 500,000 ரூபா வீதம் அவர்களின் குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சம்பவங்களின் போது காயமடைந்த நபர்களுக்காக, வைத்திய அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு 250,000 ரூபா நஷ்டஈட்டு தொகையை பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு