தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாக மோசடி – பெண் கைது

சைப்ரஸ் நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி சேடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

07 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு சைப்ரஸ் நாட்டுக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் அங்கு தொழில் கிடைக்காததால் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வந்து அந்தப் பெண்ணுக்கு எதிராக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதைத் தொடர்ந்து, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவால் எப்பாவல பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சைப்ரஸ் நாட்டில் உள்ள இந்த சம்பவத்தின் மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு