குடிசை மக்களுக்கு வீட்டுத்திட்டம்?

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் குறைவருமானம் பெறும் குடிசைகளிலும், தற்காலிக வீடுகளிலும் வாழும் மக்களுக்காக வீட்டுத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 50 ஆயிரம் வீடுகளை அமைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியேற்றவுள்ளதுடன், அடுத்த சில வருடங்களில் இந்த செயற்றிட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் இரண்டாம் மூன்றாம் கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்படும் பட்சத்தில், கொழும்பில் வீடில்லாப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணப்படுமெனவும், குடிசைகளில் வாழும் மக்களை அந்த வீடுகளில் குடியமர்த்தியப் பின்னர் அந்த இடங்களை வர்த்தக தேவைகளுக்காக பயன்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், மூன்று கட்டங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் 10 வருடங்களில் கொழும்பிலுள்ள அனைத்து குடிசை வீடுககளும் அகற்றப்பட்டுவிடும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முதற்கட்டமாக 2023ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் வீடுகளை அமைத்து குறை வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியமர்த்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு