பொதுமக்கள் நலன்சார்ந்து அரசாங்கம் செயற்பட வேண்டும் – ஜே.வி.பி

இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் காலம் வரை சாதாரண பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் நலன்சார்ந்து செயற்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அந்தக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அரசாங்கமானது தொழிலாளர் நலன்சார்ந்து செயற்பட வேண்டும் என்பதை இம்முறை மே தினக் கூட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினரும், கடந்த காலங்களில் தொழிலாளர்களை கொலை செய்ததுடன், அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டனர்.

ஆகவே மே தினங்களை கொண்டாடுவதற்கு அந்தக் கட்சிகளுக்கு எவ்வித தகுதியும் இல்லை எனவும், மே தினத்திற்கு சர்வதேச ரீதியில் தொழிலாளர்களை பிரதிநிதித்துப்படுத்தும் சிவப்பு கொடியை அந்தக் கட்சிகள் புறக்கணித்துவிட்டு, தங்களது கட்சிக் கொடிகளை பறக்கவிட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு