அல்ஜீரியாவில் விமான விபத்து – 257 பேர் உயிரிழப்பு

அல்ஜீரிய இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

257 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அல்ஜீரிய தலைநகருக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் ஒரு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாகவும், சுமார் 14 அம்பியூலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு