இராணுவத்தின் ஆயுதக் கிடங்கு அகற்றப்படுகிறது

வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வலிகாமம் வடக்கில் கடந்த 13ஆம் திகதி 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்ட நிலையில், மயிலிட்டி வடக்கில் அமைத்திருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டிடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு பொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை இராணுவத்தினர் வாகனங்களில் எடுத்துச் செல்வதுடன், ஆயுதக் கிடங்கினை சுற்றிவர உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் அகற்றப்படுவதாகவும், சிறு வெடிபொருட்களின் வெற்றுப் போத்தல்கள் பெருமளவில் உரைப்பையினுள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவைகளும் அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு