புதிய விண்கலம் ஏவியது நாஸா

பூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாஸாவின் புதிய விண்கலம் நேற்று புளோரிடாவின் கேப்கனவரல் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாஸா மையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சூரியனுக்கு அப்பாலுள்ள பூமி போன்று வாழ தகுதியுடைய புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது.

அதற்காக ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற புதிய விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த விண்கலத்தில் அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2,200 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் நேற்று மாலை 6.32 மணிக்கு புளோரிடாவின் கேப்கனவரல் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 09 ரொக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து சென்றது.

விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த விண்கலம் 2 ஆண்டுகள் செயற்படும். அது 2 இலட்சம் ஒளிரும் நட்சத்திரங்களையும், புதிய கிரகங்களையும் கண்டுபிடிக்குமென நாஸா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் சூரியனுக்கு அப்பால் மறைந்து கிடக்கும் 20,000 புதிய கிரகங்களை கண்டுபிடிக்க முடியுமென அதில் பூமி அளவில் 50 புதிய கிரகங்களும் அடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு