பெற்றோல் விலை அதிகரிப்பு?

பெற்றோல் விலையை அதிகரிப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரத்தை அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை அதிகரித்த பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டத்தில் இயங்குவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை அதிகரித்த பின்னர் கனியவள அபிவிருத்தி அமைச்சு, நாளொன்றுக்கு மேலதிகமாக 38 மில்லியன் ரூபா நஷ்டமடைந்ததாக அந்த அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலமை காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் விலையும் அதிகரிக்கப்பட வேண்டுமென நிதியமைச்சுக்கு கூட்டுத்தானம் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, இது சம்பந்தமாக விலைச் சூத்திரம் ஒன்றை வகுப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அந்த சூத்திரம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கினால், உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு அமைவாக இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாட்டிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு