ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இலங்கைக்கு 2ஆவது இடம்

சனத்தொகைக்கு நிகராக, ஊட்டச்சத்து குறைபாட்டில் தெற்காசியாவில் இலங்கை இரண்டாம் இடத்திலுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக உணவு ஸ்தாபனத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பிலான 2017ஆம் ஆண்டுக்காக அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2014 – 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையிலுள்ள சனத்தொகைக்கமைய 22.1 சதவீதமானோர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக காணப்படுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு