யாழ். பல்கலை மாணவர்களுக்கான அறிவிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தொழிநுட்ப பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

விடுதி வசதி பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில் விடுதிக்கு திரும்ப முடியும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களின் கற்றல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு