அரசியல்வாதிகள் சூதாடுகிறார்கள் – கூட்டு எதிரணி

நாட்டில் பெருளாதாரம் மரணித்து கிடக்கும் நிலையில் அரசியல்வாதிகள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்ததுடன், பிணத்தை வீட்டில் வைத்துக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும் நிலையிலேயே நாடு தற்போது உள்ளதாகவும், இந்தநிலையில் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தை வைத்திருப்பதா இல்லையா என்பது குறித்து ஓரிரு தினங்களில் தீர்மானிக்கப்படும் எனவும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட குழு தாங்கள் 16 பேரும் மேலும் பலருடன் எதிர்தரப்பில் அமருவோமென தெளிவாக அறிவித்துள்ள நிலையில், அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் என்றும் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு