அரசாங்கத்தை மாற்ற வேண்டும் – வாசுதேவ

அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை காத்திருக்காது உடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்ய வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரும் திருத்தச் சட்டம் குறித்து நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பது கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமையுமென சிலர் கருத்து வெளியிட்டு வருகின்ற போதிலும், அதுவரை காத்திருக்காது மக்களுக்காக தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கொண்டு வரும் யோசனைகள் குறித்து கவனமாக செயற்பட வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு