தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை உபதலைவர் வேலணை வேணியன் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒருமித்த முற்போக்கு கூட்டணி சார்பில் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாகத் தெரிவித்து கட்சித் தலைமை தன்னை ஏமாற்றிவிட்டதாக வேலணை வேணியன் குற்றம் சுமத்தியுள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் முதலிடத்தில் இருந்த தமக்கு ஆசனம் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவராகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை உப தலைவராகவும் வேலணை வேணியன் பதவி வகித்து வந்த நிலையில், இந்த பதவிகளை கைவிட்டுள்ள அவர் புதிய அரசியல் கட்சி உருவாக்கி எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.