விரைவில் புதிய அரசியல் நடவடிக்கை?

எதிர்வரும் 23ஆம் திகதியின் பின்னர் தமது புதிய அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, அடுத்துவரும் காலங்களில் தாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவாக எதிர்க்கட்சியின் பொறுப்புக்களை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு