மயிலிட்டியில் ஆயுதங்கள் மீட்பு (Photos)

மயிலிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை வீட்டு உரிமையாளர்கள் வீட்டினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது, தண்ணீர்த் தொட்டிக்குள் பழைய ஆயுதங்கள் இருந்துள்ளனர். வீட்டு உரிமையாளர்கள் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம், பலாலி இராணுவத்தினர் சென்று கண்ணிவெடிகள் மற்றும் பழைய ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

இராணுவத்தின் பாவனையில் இருந்த பகுதியில் அண்மையில் பொது மக்களிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறான அநாமதேய வெடிபொருட்கள் இருப்பதை பொது மக்கள் அவதானித்தால், அவற்றினைக் கையால் தொடாமல் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இராணுவ முகாம்களிற்கு அறிவிக்குமாறும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு